இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்..!!
இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை 10,9 என்ற கவுன்ட்டனுடன் தொடங்கிய விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்ட பாதைக்கு சென்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.
சந்திரயான் 3 வெற்றிக்கு பல இந்தியர்கள் கடினமாக உழைத்தனர். அதில் கவுன்ட்டன் முதல் நிலவில் தரையிறங்கியது வரை அறிவித்த ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ விஞ்ஞானி “வளர்மதி” இன்று காலமானார்.
அவருக்கு வயது 50. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வளர்மதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை சேர்க்கப்பட்டார். சோகம் அளிக்கும் விதமாக நேற்று மாரடைப்பால் அவர் காலமானார். வளர்மதியின் மறைவிற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரியலூரில் பிறந்து தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் முடித்த வளர்மதி, பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்து, பின் 1984ம் ஆண்டு இஸ்ரோ பணியில் சேர்ந்தார். 2011ஆம் ஆண்டில் ‘ஜிசாட்’ 12 பணியின் திட்ட இயக்குநர் உட்படப் பல்வேறு பொறுப்புகளின் கீழ் பணியாற்றினார். 2015ல் அப்துல் கலாம் நினைவாகத் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..