ஷாருக்கான் உடல் நலக்குறைவுக்கு இது தான் காரணமா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தீவானா என்ற இந்தி திரைபடத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர்.அதன்பின் தமிழில் இவர் நடிப்பில் வெளியான உயிரே திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் இவர் நடிப்பில் தமிழில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த “பதான்“, “ஜவான்,” மற்றும் “டன்கி.” என்ற மூன்று திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனாது. இதில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆயிரம் கோடியை வசூலித்து ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தற்போது ஷாருக்கான், கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தை, திரைப்படத் தயாரிப்பாளரான சுஜோய் கோஷால் இயக்க உள்ள நிலையில் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபி எல் விளையாட்டில் ஷாருக்கான்:
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இதை காண்பதற்காகவும் மற்றும் தனது அணி வீரர்களை உற்ச்சாக படுத்துவதற்காகவும் தனது இரண்டு மகள்களுடன் அகமாதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதனத்திற்கு சென்றுள்ளனர்.
உடல் நலக்குறைவு ஏற்பட்ட ஷாருக்கான்:
அப்போது திடிரென ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் ஷாருக்கான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த செய்தியை அறிந்த திரைபிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிவிட்டு வருகின்றனர்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..