நடிகர் மனோஜ்-ன் கடைசி ஆசை இதுவா…?
1999 ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ். இவருக்கு இணையாக ரியா சென் நடித்தார். பாரதிராஜா இயக்கிய படம் என்றாலும் இந்தத் திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. இருப்பினும் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும், விமர்சகர்கள், பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றன.
குறிப்பாக இதில் இவர்,
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஈச்சி எலுமிச்சி
என்று இவர் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து சமுத்திரம் திரைப்படத்திலும், தனது தந்தை இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் தோன்றினார். இவருக்கு மதிவதனி மற்றும் ஆர்த்திகா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது மனோஜ் மரணம் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் இந்த தகவலால் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவரது மறைவிற்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிவக்குமார், கவுண்டமணி, வைரமுத்து, மதன் கார்க்கி, சரத்குமார், கார்த்திக் சுப்புராஜ், நிழல்கள் ரவி, சார்லி, பேரரசு, சந்தான பாரதி மற்றும் அவருடைய மகன் சஞ்சய் உள்ளிட்டோர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, மணிரத்தினம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது அவரின் கடைசி ஆசை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடுத்த பாகத்தை சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி உள்ளார். ஆனால், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. வேதனை அளிக்கிறது.