வடகொரியா நாடு என்பது உலகின் கண்ணிற்கு என்றும் ஒரு புரியாதபுதிராகவே இருந்து வருகிறது. அந்த நாட்டின் அதிபர் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் அந்நாட்டின் மக்களுக்கும் அந்நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
அந்நாட்டில் நாடாகும் எந்த ஒரு செய்தியம் உலகின் பார்வைக்கு வருவதில்லை அந்த நாட்டின் ஊடகமே வெயிட்டால் தான் அதை பற்றி மற்ற நாடுகளுக்கு தெரியும். இந்நிலையில் அந்த நாட்டில் அண்டை நாடான தென் கொரிய வின் படங்கள் பாடல்கள் அல்லது நாடகங்களை காணுவோர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்ற கொடுமையான சட்டத்தை வட கொரிய இயற்றியுள்ளது.
இப்படி ஒரு சட்டம் அந்நாட்டில் அமலிளிருக்கும் தருணத்தில் அந்த நாட்டின் இரண்டு சிறுவர்கள் தென்கொரிய நாடகங்களை பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். குற்றம் சாட்டப்பட்டிருந்த அந்த இரண்டு சிறுவர்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு இந்த செயல் குற்றம் என அறிவித்து அந்நாட்டின் பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரண்டு சிறுவர்களும் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சம்பத்தை பல உலக நாடுகளும் மனித உரிமை ஆணையங்களும் கடுமையாக எதிரித்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்த கொலை சம்பவம் கடந்த வாரம் தான் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு சிறுவனுக்கு 16 வயதும் மற்றொருவருக்கு 17 வயதும் என்பது குறிப்பிடத்தக்கது.