இனி சிஎஸ்கே அணிக்கு இவர் தான் கேப்டனா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதிவியில் இருந்து தோனி விலகிய நிலையில், புதிய கேப்டனாக ருத்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்ற நிலையில், தோனி பதிவியிலிருந்து விலகியது தெரியவந்துள்ளது.
மேலும், தோனி அணியில் முக்கிய வீரராக செயல்பட உள்ளார். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பையை கைப்பற்றி இருந்தது. முன்னதாக தோனி தன்னுடைய பேஸ்புக் பதிவில் “புதிய சீசனில் புதிய வேலைக்காக காத்திருக்க முடியவில்லை. காத்திருங்கள்” என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..