அடுத்த ஆண்டில் இந்தியா வல்லரசு நாடக மாறிவிடும்..!!
அடுத்த சில ஆண்டுகளில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப்போவதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து படேல் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர், சர்தார் வல்லபபாய் படேலின் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாட்சித் திறன் மற்றும் நமது தேசத்தின் தலைவிதியை அவர் வடிவமைத்த அதீத அர்ப்பணிப்பை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு தங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுவதாக தெரிவித்த அவர், அவரது சேவைக்கு தாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.
உலகில் வேறு எந்த நாடும் அடைய முடியாத நிலவின் பகுதியை இன்று இந்தியா அடைந்துள்ளது நமக்கு பெருமை அளிப்பதாக தெரிவித்த அவர், இந்தியாவில், நமது தொழில் வல்லுநர்கள் உலகின் பில்லியன் டாலர் நிறுவனங்களை இயக்கி வழிநடத்துவதாக தெரிவித்தார்.
Discussion about this post