உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, மெக்சிகோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்று வந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைப்பெற்றது. இதில் இந்திய மகளிர் அணி, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மெக்சிகோவை எதிர்த்து விளையாடியது.
இந்திய அணி சார்பில் ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி மற்றும் பர்னீத் கவுரும், மெக்சிகோ அணி சார்பில் டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெராவும் களமிறங்கினர்.
https://twitter.com/i/status/1687389934401753088
ஆட்டத்தின் தொடக்கம் முதலே நிதானத்துடன் விளையாடிய இந்திய மகளிர் அணி 235-229 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.