இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 15 இடங்களுக்கும் மேலாக 100 டிகிரி பேரன் ஹிட்டை தாண்டி வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் 9 மாவட்டங்களில் மட்டுமே 100 டிகிரி பேரன் ஹிட்டை தாண்டி வெயில் சதம் அடித்துள்ளது….
குறிப்பாக ஈரோடு 100.76°F, கரூர் பரமத்தி 102.20°F, மதுரை நகரம் 103.64°F, மதுரை விமான நிலையம் 102.92°F, நாமக்கல் 102.20°F, தஞ்சாவூர் 100.40°F திருச்சி 103.82°F, திருத்தணி 101.48°F, வேலூர் 100.04°F வெயில் பதிவாகியது….