கனமழை தாக்கம்..! அயராமல் உழைக்கும் தூய்மை பணியாளர்கள்..!! துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் சென்று பாராட்டு…!!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில்., தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது வருகிறது..
இந்நிலையில் சென்னையின் மழைநீர் தேங்கியுள்ள பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்., அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சிற்றுண்டிகளை வழங்கினார்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது கனமழையின் தாக்கம் மக்களை நெருங்காமல் இருப்பதற்காக தூய்மைப்பணியாளர்கள் மற்றும் முன்களவீரர்கள் இரவு – பகல் பாராமல் அயராது உழைத்து வருகின்றனர்.
தூய்மைப்பணியாளர்கள் – சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் பணியாளர்கள் உட்பட சுமார் 600 முன்களப்பணியாளர்களுக்கு பிரெட், சிற்றுண்டி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளைச் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று வழங்கினோம்.
அவர்களின் இடைவிடாதப்பணியை பாராட்டி வாழ்த்தினோம்.. என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்.