வாட்ஸ் ஆப்பில் இதை ஷேர் செய்தால் ஜெயிலா..? இதுவரை 23 பேர்..!!
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை இரவு சிறுத்தை ஒன்று செந்துறை அரசு மருத்துவமனைக்குல் புகுந்தது. அதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் தெர்மல்ட்ரோன் ஆகியவற்றின் உதவியுடன் 50 பேர் கடந்த சில நாட்களாக சிறுத்தையை தேடி வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நிண்ணியூர் கிராமத்தில் உள்ள வயலில் சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வஞ்சினபுரம், குழு மூர்வங்காரம் உள்ளிட்ட ஓடைகளில் 3 கூண்டுகளை வைத்து கூண்டில் இறைச்சி களை வைத்து வனத்துறையினர் சிறுத்தைக்காக காத்திருந்தனர்.
ஆனால் வனத்துறையினரின் கூண்டில் சிறுத்தை இதுவரை சிக்கவில்லை பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிண்ணியூர் கிராமத்தில் சிறுத்தையின் கால்தடம் கண்டறியபட்ட நிலையில் இதே போக்கில் சிறுத்தை நகருமானால் பெரம்பலூர் மாவட்டம் பச்சமலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு என மாவட்ட வன அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறுத்தையை பிடிக்க வைக்க பட்ட மூன்று கூண்டிலும் சிறுத்தை சிக்காத நிலையில் சிறுத்தை பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்று இருக்குமா என்ற கோணத்தில் 2 மாவட்ட வனத்துறையினரும் இணைந்து இரு மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வயல்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள சமத்துவபுரம் சாய்பாபா ஆலையத்தின் அருகே இரட்டை சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ் ஆப்பில் போலியான செய்திகள் அதிகமாக பகிரப்பட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த செய்திகள் ஊடகங்களால் பரப்ப பட்டவை அல்ல யாரோ வேண்டும் என்றே வாட்சப்பில் பரப்பி பொதுமக்களை அச்சுருத்த பார்ப்பதாக வனத்துறை சார்பில் கீழப்பழுவூர் காவல்நிலையத்தில் வாட்சப்பில் பரப்பு வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியுள்ளனர்.
அதன் பெயரில் சைபர் கிரைம் போலீசார் இந்த போலியான பதிவுகளை யார் பரப்பினார்கள் என்றும்.., மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியவர்கள் என இதுவரை 23 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..