அரசியலில் அவர் கூப்பிட்டால் நான் போவேன்..! கயல் ஆனந்தி பேட்டி..!
கயல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கயல் ஆனந்தி, அதன் பின் சண்டி வீரன், பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, மன்னவர் வகையறா, கமலி ஃப்ரம் நடுக்காவேரி, கஸ்டடி, யுகி, போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற “பொட்ட காட்டில் பூவாசம்” என்ற பாடலும் படமும் நல்ல வரவேற்பை பெற்றது என சொல்லலாம். மேலும் பல்வேறு துணிக்கடைகள், நகைக்கடைகள், அழகு நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதனை திறந்து வைத்துள்ளார்.
அதேபோல் நேற்று திருச்சியில் நடைபெற்ற தனியார் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைத்தார்.. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சினிமா படப்பிடிப்பிற்காக பல முறை திருச்சி வந்துள்ளேன். திருச்சி எனக்கு எப்போதும் மறக்க முடியாத ஒரு இடம். திருச்சியில் கிடைக்கும் உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடித்த உணவுகள் என கூறினார்..
இப்போ எல்லாம் ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,
ஆனந்தி பதில் : தற்போது தெலுங்கில் ஒரு வெப் சீரியஸில் நடித்து வருகிறேன். நல்ல திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காக குறைந்த அளவில் படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.
இன்றைய தலைமுறையினர் சிலர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தவறான ரீல்ஸ் செய்து சிக்கி கொள்வது குறித்த கேள்விக்கு..?
ஆனந்தி பதில் : நான் சமூக வலைதளங்கள் பெரிதாக பயன்படுத்துவது இல்லை. யாராக இருந்தாலும் முகம் தெரியாத நபர்களிடம் பேசுவதற்கு முன் பார்த்து பேச வேண்டும்.. உங்கள பற்றிய personal details அவங்களுக்கு சொல்லாதிங்க என அறிவுரை வழங்கினார்.
நடிகர் விஜய் செய்து வரும் அரசியல் செயல்கள் குறித்த கேள்விக்கு,
ஆனந்தி பதில் : சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கில் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, எங்களுடைய ஆதரவு கண்டிப்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு இருக்கும்”.. ஒருவேளை அவர் எங்களை அரசியலுக்கு அழைத்தால் நாங்கள் செல்வோம் என பதில் அளித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..