பாஜகவை எதிர்த்து பேசுற அளவுக்கு அதிமுகவுக்கு தைரியம் இல்ல..!!
பாஜகவை எதிர்த்து பேசற அளவுக்கு அதிமுகவுக்கு தைரியம் இல்ல. அவர்களுக்கு இடையே நிலவுவது பொய் சண்டை என “காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி” தெரிவித்துள்ளார்.
நேற்று திண்டுக்கல்லில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வாக்குச்சாவடி நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது.. தமிழகத்தில் அதிமுக, பாஜக இடையே நடைபெறும் சண்டை ஒரு பொய்யான சண்டை.
பாஜகவை எதிர்த்து பேசும் அளவிற்கு அதிமுகவுக்கு தைரியம் கிடையாது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வராது.
மோடி நாடாளுமன்றத்தையும், இந்தியாவையும் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வர பல வேலைகளை செய்து வருகிறார்.., அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டார்.
இட ஒதுக்கீடு என்பது ஒரு தொகுதி வரையறையின் கீழ் நடைபெறும் என மோடி சொன்னார். இதனால் ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களில் எல்லாம் பல மடங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவார்கள்.
தென் மாநிலங்களில் உள்ள 4 மாநிலங்கள் அவர்களுக்கு தேவையில்லை. இதனால் தமிழகத்தில் தொகுதி வரையறை செய்யும்.., நாடாளுமன்ற தொகுதி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த முறை அவர்கள் எடுத்த கணக்கெடுப்பு தவறானது.
மோடி ஆட்சிக்கு வந்த பின்.., இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பே நடைபெறவில்லை. இந்தியாவில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது என்பதை முழுமையாக தெரியாமலே பாஜக ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு எப்படி வழங்க கொடுக்க முடியுமா ..? என இவ்வாறே அவர் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..