ஹரியாணா நூஹ் என்ற இடத்தில் உள்ள சகாரா விடுதி மாடியில் இருந்து சிலர், சென்றிருந்த விஸ்வ இந்து பரிசத் ஊர்வலம் மீது கல் எறிந்தார்கள் என்று கூறி, நேற்று அந்த விடுதியை இடித்து விட்டார்கள்.
அது மட்டுமில்லாமல் கட்டுமான உரிமானம் இல்லை எனக் கூறி, கடந்த 4 நாள்களில், 162 நிலையான கட்டுமானங்கள், 591 இடைக்காலத் தங்கும் இடங்கள், குடிசைகளை, ஹரியாணா அரசு இடித்துத் தகர்த்து விட்டது.
அத்தனை பேரும் இன்றைக்கு தெருவில் நிற்கின்றார்கள்… அல்லது அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டு இருக்கின்றார்கள்.
பொதுவாகவே இந்தியா முழுமையும், ஏன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் உங்கள் தெருவிலும் கூட, நகர்மன்றம், மாநகர் ஆட்சி மன்றங்களில் விண்ணப்பித்து உரிமம் பெற்று கட்டுமானங்கள் கட்டுவது இல்லை என்பதை எல்லோரும் அறிவோம். அதுவும் வட இந்தியாவில் அது அறவே கிடையாது. ஆனால், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் வீடுகளை மட்டும், தொடர்ந்து ஹரியாணா ஆளும் பாஜக அரசு இடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post