ஹே சந்திராயன் நிலவில் நீ மடியேறு..,நாளை நாங்கள் குடியேற..! கவிஞர் வைரமுத்து கவிதை..!
சந்திராயன் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ.. சமூகவலைத்தளம் பக்கத்தில்
நேற்று வெளியிட்டு இருந்தது.
நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள சந்திராயன் 3 விண்கலத்தை விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற பிறகு நிலவின் புகை படத்தை பகிர்ந்தது.
ஆகஸ்ட் 18ம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற பிறகு லேண்டரின் சுற்றுவட்ட பாதையில் இருந்து படிப்படியாக குறைந்து அடுத்த கட்ட சுற்று பாதைக்கு நேற்று வந்தடைந்தது. தற்போது நிலவில் இருந்து அதிகபட்சம் 134 கிமீ என்ற தொலைவில் தரையிறங்கும் அதே நேரம் மாற்றப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
மேலும் ஆகஸ்ட் 21ம் தேதி லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு தரையிறங்கும் என தகவல் வெளியிட்டது.
நேரம் நெருங்க நெருங்க
மூளைக்குள் வட்டமடிக்கிறது
சந்திரயான்நிலவில் அது
மெல்லிறக்கம் கொள்ளும்வரை
நல்லுறக்கம் கொள்ளோம்லூனா நொறுங்கியது
ரஷ்யாவின் தோல்வியல்ல;
விஞ்ஞானத் தோல்விசந்திரயான் வெற்றியுறின்
அது இந்திய வெற்றியல்ல;
மானுட வெற்றிஹே சந்திரயான்!
நிலவில் நீ மடியேறு
நாளை… pic.twitter.com/aR0cqxUVxc— வைரமுத்து (@Vairamuthu) August 22, 2023
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சந்திராயன் 3 பற்றி புது கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஹே சந்திரயான் நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
நேரம் நெருங்க நெருங்க
மூளைக்குள் வட்டமடிக்கிறது
சந்திரயான்
நிலவில் அது
மெல்லிறக்கம் கொள்ளும்வரை
நல்லுறக்கம் கொள்ளோம்
லூனா நொறுங்கியது
ரஷ்யாவின் தோல்வியல்ல;
விஞ்ஞானத் தோல்வி
சந்திரயான் வெற்றியுறின்
அது இந்திய வெற்றியல்ல;
மானுட வெற்றி
ஹே சந்திரயான்!
நிலவில் நீ மடியேறு
நாளை நாங்கள் குடியேற என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..