சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 44,440 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது
ஆடி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என்று சொல்லுவார்கள்.. ஆனால் இன்று வரை தங்கம் விலை குறையாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
நேற்று முன் தினம் 15 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,440 ரூபாய்க்கும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,555 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 78.50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 78,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.