ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது சற்றே நிம்மதியை தருகிறது.
தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்து விற்பனையான நிலையில், இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,505 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 44,040 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5,485 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43,880 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 5,984 ரூபாய்க்கும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 47,872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி ஒரு கிராம் 76.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ 76,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post