செல்போன் டெம்பர் க்ளாஸ் ஒட்ட வந்த இடத்துல ஆட்டையா..?
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அப்சல் என்பவருக்கு சொந்தமான மொபைல் வேர்ல்ட் என்ற செல்போன் கடைக்கு, மொபைல் டெம்பர் கிளாஸ் ஒட்டுவதற்காக வந்த இரண்டு இளைஞர்கள்
ஊழியர்கள் டெம்பர் கிளாஸ் மாற்றிக் கொண்டிருந்த போது, கடையின் டேபிள் மேல் இருந்த 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை எடுத்து பார்ப்பது போல நடித்து செல்போனை திருடி சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இளைஞர்கள் செல்போனை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..