கஞ்சா விற்பணைக்கு புதிய யுத்தியை மேற்கொண்ட கஞ்சா குடுக்கி… போலீசில் சிக்கியது எப்படி..?
சென்னை ஆவடி அடுத்த பூந்தமல்லி அருகே மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக மாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவலையடுத்து மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் மாங்காடு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டபோது அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் மாங்காடு கோவூர் பகுதியைச் சேர்ந்த ஈனோக் (28), தாமோதரன் (என்ற) அப்பு(27), சிக்கராயபுரத்தை சேர்ந்த விஷ்ணு(25), சரத்குமார்(25), என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (32), என்பவரிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது
மேலும், ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 1/2 கிலோ கஞ்சா, 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க வாட்ஸ் அப் மூலம் கல்லூரி மாணவர்களை குறி வைத்து இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்