முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் தனது 96 வது அகவையில் காலமானார். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்ட்டு இருந்த முன்னாள் அதிபர் நேற்று காலமானார். இதுகுறித்த தகவலை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறுகையில், முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் 96 வயதில் காலமானார், இவர் 1993 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் சீனாவின் அதிபராக இருந்தார். 1926ம் ஆண்டு பிறந்த இவர் பட்டப்படிப்பை முடித்த பிறகு 1980 துணை மந்திரியாக நியமிக்கப்பட்டார் இரண்டு வருடங்கள் கழித்து மந்திரியாக பத்தி உயர்ந்தார். பின்னர் பல்வேறு துறைகளில் பதவி பெற்று பணியாற்றினார்.
மேலும் 1993ம் ஆண்டு சீனாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 203 வரை ஆட்சி அமைத்தார். பின்னர் பல்வேறு சாதனைகளை புரிந்த இவர் 2002 ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வயது முதிர்வினால் ரத்த புற்றுநோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த இவர் நேற்று உயிரிழந்தார். இதனை அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் ஜியாங் ஜெமினின் இழப்பு கட்சி,ராணுவம் மற்றும் மக்களுக்கு பெரும் இழப்பாகும் என்று தெரிவித்துள்ளது.