பிரபல நடிகை சமந்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா கடந்த ஆண்டு யசோதா பட டப்பிங் போது தான் மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் அவதிப்பட்டு வருவதாக அறிவித்தார். சமீபத்தில் அதன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர் சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் தன் உடல்நிலை குறித்து பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில், தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
இது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, இதய அமைப்பு சரியாக செயல்பட வைக்கிறது மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.