எல்லோரும் நம்மை விட்டு ஒருநாள் போயிடுவாங்க… இசை வெளியீட்டு விழாவில் சிம்பு உருக்கம்….!
1996ஆம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் இந்தியன்.
இதில் கமல் ஹாசன்,மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
1995ல் வெளிவந்த பாஷா திரைப்படத்தின் வசூலை முறியடித்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்தியன் 2:
தற்போது காலத்திற்கேற்ப அரசியல் பேசும் கதையம்சங்களை கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
முதல் பாகத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்ததை தொடர்ந்து இந்த படத்தில் அனிரூத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ஜூன் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதையொட்டி, இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுது.
இவ்விழாவில் இயக்குநர் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சர்ப்ரைஸ் கொடு்த்த சிம்பு:
இந்த இசைவெளியிட்டு விழாவில் சர்ப்ரைஸாக கலந்து கொண்ட நடிகர் சிம்பு படத்தை பற்றியும் கமல்,சங்கர்,ஏ.ஆர் ரகுமான், அனிருத் ஆகியோரை பற்றி சுவாரிஸ்யமாக பேசியிருந்தார்.
எல்லாரும் ஒருநாள் விட்டு போய்டுவாங்க:
அப்போது விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சனைனு கேள்விபட்டதும் உடனடியாக குளிக்காமல் அவசரஅவசரமாக கமலை பார்க்க போனேன்.
அப்போது நான் உடல் எடையை குறைச்சேன்னு பலர் பேசுனாங்க. ஆனா, அது ஆன்மிகம் சார்ந்த விஷயம். எல்லோரும் நம்மை விட்டு ஒருநாள் போயிடுவாங்க.
நம்மளோட முடிகூட நம்மைவிட்டு போயிடும். நம்ம கிட்டயே இருக்கிறது நம்ம உடம்பு மட்டும் தான். அதை பத்திரமா பாத்துக்கோங்க. நான் அதை ரொம்ப காலம் கடந்த பிறகு தான் புரிஞ்சுக்கிட்டேன் என்று கூறியுள்ளார்.
-பவானிகார்த்திக்