பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலில், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த கட்டுமானம் தங்களுக்கு உரிய இடத்திற்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாயி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் தரப்புக்கு எதிரான உத்தரவை பிறப்பித்தார். அதனை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, அடுத்த 2 மாதங்களில் கோயில் நிர்வாகம் கட்டுமானங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் இது குறித்து நீதிபதி சில கருத்துக்களையும் பதிவு செய்தார்.
அதில், “பொது சாலையை யார் ஆக்கிரமித்தாலும் அதை தடுக்க வேண்டும். கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அதனை அகற்றும்படி கோர்ட் உத்தரவிடும்”, என கூறினார்.
Discussion about this post