வெளியான தேர்தல் தேதி..!! 7 கட்ட தேர்தலா..? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்..?
புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையக அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதற்கட்ட தேர்தலின்போதே தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
அதேபோல், ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மே 7ம் தேதி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 13ம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது
மே 20ம் தேதி ஒடிசா, மஹாராஷ்டிரா, ஜம்மு – காஷ்மீர், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது
மே 25ம் தேதி ஹரியானா, டெல்லி, ஒடிஷா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 01-ஆம் தேதி ஹிமாச்சல பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.