பழவேற்காடு ஏரியில் நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் இருதரப்பினர் இடையே நிலவி வரும் எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை.
இருதரப்பினர் பிரச்சனை இல்லாத வகையில் மீன்பிடிக்க எல்லையை பிரித்து வழங்க கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதுவரை நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
















