தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ந்தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ந்தேதியும் காலாண்டு தேர்வுகள் துவங்கி, செப்டம்பர் 27 அன்று காலாண்டு தேர்வு முடிவடைகிறது.
தேர்வு முடிந்த பின்னர் செப்டம்பர் 28 ந்தேதி முதல் அக்டோபர் 2 வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ந்தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.