கடந்த ஜோடி விடுமுறையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். காமெடியை மையமாக கொண்டு எடுக்கபட்ட இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேப்பை பெற்றது. இந்நிலையில் இந்த டான் படத்தை பார்த்தபோது எனக்கு சிரிப்பே வரவில்லை என்று உதயநிதி கூறியது வைரலாகி வருகிறது.
பிரபல யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், டான் படத்தை வெளியிடுவதற்கு 20 நாட்களுக்கு முன்பு நானும் என் நண்பர்களும் பார்த்தோம் அதில் கடைசி 20 நிமிடங்கள் நன்றாக இருந்தது ஆனால் அதில் இருந்த கல்லூரி காட்சிகளின் காமெடி எங்களுக்கு பிடிக்கவில்லை அதனால் சிவாவிற்கு போன் செய்து கல்லூரி 10 நிமிட காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறினேன் அதற்கு சிவா சரி என்று கூறிவிட்டு 5 நிமிடங்களை சேர்த்துவிட்டார். நீக்க சொன்னால் ஏன் புதிய காட்சிகளை சேர்த்தீர்கள்? என்று கேட்டதற்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறினார்.
மேலும் அந்த முடிவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார் அதன் பிறகு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை என்று அவரை கூறினார். சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார். இவர் கொடுக்கும் ஓட்டிகள் தற்போது வைரலாகி வருகிறது.