நடிகர் விஜய்க்கு அபராதம் ஏன் தெரியுமா..?
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கடந்த ஜூன் 17ம் தேதி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.., அதற்கு உதவியாக இருந்த தொகுதி வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நேற்று காலை சென்னையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக நேற்று காரில் வந்துள்ளார். அப்போது அக்கறை ஜங்க்ஷன் போக்குவரத்து சிக்கனலில் சிவப்பு நிற விளக்கு எரிந்தபோது பிற வாகனங்கள் நின்று கொண்டிருந்த நிலையில், நடிகர் விஜயின் கார் சிக்கனலில் நிற்காமல் சென்றுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவை பார்த்த பலரும்.., நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் கார் போக்குவரத்து சிக்கனலை மீறியதால் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னும் ஒருமுறை கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் விஜயின் கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.