அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்துக்கள் அதிவீரன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். இதைப் பிடித்துக்கொண்ட பாஜக மற்றும் இந்துத்துவவாதிகள் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் எனக் கூறியதாக கட்டுக்கதை கட்டி எதிர்ப்புக் குரலை தெரிவித்து வருகின்றனர். அதற்கு நேர்மாறாக ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் – வாழ்த்துகள் அதிவீரன்” என பதிவிட்டுள்ளார். மேலும் தனது ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தை நோக்கி சமத்துவத்தை வலியுறுத்தும் அதிவீரன் கதாபாத்திரம் பேசும் வசனத்தை கட் செய்து பதிவிட்டுள்ளார்.
“இனிமேல் உன்னுடைய உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் யாரும் பயப்படப்போவதில்லை. இதுக்கு அப்றமும் நீ துப்பாக்கிய தூக்கி மிரட்டுனாலும் அவன் அவன், அவன் திசைய நோக்கி ஓடிட்டு தான் இருப்பான்” என்ற வசனத்துடன், இறுதியில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளுடன் அதன் விளக்கத்தை வடிவேலு சொல்லும் காட்சியையும் பதிவிட்டு, உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதை உணர்த்தியுள்ளார்.
https://twitter.com/mari_selvaraj/status/1699705228789231977?s=20