இவருடன் மட்டுமே கூட்டணி வைக்க ஆசை..! சீமான் பகிர்..! கடுப்பான நாதக தொண்டர்கள்..!
கடந்த லோக்சபா தேர்தல் வரை “நாம் தமிழர் கட்சி” எப்போதும் தனித்து நின்று தான் போட்டியிடும்., கூட்டணியை விரும்பாது என பேசிக்கொண்டிருந்த சீமான். தற்போது கூட்டணி என்றாலே அது என் தம்பி-விஜயுடன் மட்டுமே என என புதிர் வைத்து பேச தொடங்கியிருப்பது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்த நம் மதிமுகம் நாதகவை தொடர்பு கொண்டு பேசிய போது,
தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வரும் போது சீமான், கட்டாயம் கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சிப்பார் என நாதக தலைமைக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். “நாடாளுமன்ற தேர்தலில் கூட கோட் பட பாடல் மூலமாக எங்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார் எனவும்
நாதகவுக்கு வாக்களியுங்கள் என விஜய் ரசிகர்கள் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே விஜய்யும் சீமானும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்கான அப்டேட்களை சீமான் வெளியிடுவார் எனவும் சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் – நாம் தமிழர் கட்சி கூட்டணி :
அதேசமயம் விஜய்யுடன் சீமான் கூட்டணி வைக்கப்போவதை நாதக விரும்பவில்லை., மேலும் நடிப்பது நாடாளும் தகுதியல்ல என்பதே நம் கோட்பாடு. திரைபுகழை மட்டுமே தகுதியாக கொண்டிருந்தால் ரஜினி, கமல் போன்ற நடிகர்களை விமர்சித்தோம்.
நடிக்கும் போதே அரசியலுக்கு வருவோம் என சொன்ன கமல், ரஜினியை விமர்சித்து பேசியதில் கட்சி தொடங்க வேண்டும் என்ற ஆசை இனி அவர்களுக்கு வரவே கூடாது என சொல்லும் அளவிற்கு சீமான் விமர்சித்து பேசி இருந்தார்.
இப்படியெல்லாம் பேசிவிட்டு இன்று நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்க வேண்டியது என சொன்னால் நம் மீதான நம்பகத்தன்மை என்னவாகும்..?
விஜயுடன் சீமான் கூட்டணி வைக்கப்போவதை நாங்கள் விரும்பவில்லை.., அதையும் தாண்டி அவர் கூட்டணி வைத்துக்கொண்டால் நாங்கள் கட்சியை விட்டு விலகுவோம். புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சிப்பார். அதற்கு நாதக, தேமுதிக மற்றும் மநீம ஆகிய இயக்கங்களே நிகழ்கால எடுத்துக்காட்டு.
அப்படியே கூட்டணி வைத்துக்கொண்டாலும் விஜய் வெற்றி பெற்ற பின், அவருக்காக உழைத்தவர்களை வேட்பாளராக நிறுத்திவிட்டு மற்ற கட்சிகளுக்கு சொற்ப தொகுதிகளை கொடுப்பார். ஆனால் சீமான் தலைமையை பிற கட்சிகள் ஏற்கும் பட்சத்தில் தான் நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள்.
விஜய்-யுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டால், நான்கு பொதுத் தேர்தல்களை இதுவரை சீமான் சந்தித்தது அர்த்தமில்லாமல் போய்விடும். கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனித்து நின்று வெற்றி பெற்றால் மட்டுமே நாதக-விற்கு கவுரவம்.
அதை விட்டு கூட்டணி வைத்து வெற்றி பெற்றால் நாதகவின் பேர் புகழ் எல்லாம் போய் விடும்.., காரணம் சீமானிற்கு இருக்கும் மக்கள் பலத்தை விட தளபதியின் ரசிகர்கள் பலம் அதிகம்.., அப்படி இருக்க இவர்கள் கூட்டணியில் விஜய் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அப்போதும் நாதக தனித்து தான் நிற்கும்.. அதற்கு நாதக என்றும் தனித்தே நின்று விடலாம்..
இதனை அண்ணன் சீமான் புரிந்து கொண்டு விஜய்யுடன் கூட்டணியில்லை, 2026-ல் தனித்துதான் போட்டியிட போகிறோம் என அறிவிக்க வேண்டும். இதுவே எங்களின் வேண்டுகோள் என சீமான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“விஜய்யின் அரசியல் வெற்றிக்கான வழியை தேடுவதாக அமையுமே தவிர கொள்கையை மையப்படுத்தியாதாக இருக்காது. ஆனால் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசிய கொள்கையை கொண்டிருப்பதால் தமிழர் அல்லாதோர் வாக்குகள் அக்கட்சிக்கு வரப்போவதில்லை. கூடுதலாக சிறுபான்மையினரின் வாக்குகளும் சீமானுக்கு வருவதில்லை என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.
அதுமட்டுமின்றி நாதக-வின் போக்கை விஜய் என்றும் விரும்ப மாட்டார். ஒருவேளை விஜய் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பினால்.., அதற்கு காரணம் சீமானாக மட்டும் தான் இருப்பார். விஜய் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் சீமான் மேடைக்கு மேடை விஜய் பற்றி புகழ்ந்து பேசி வருகிறார்.
அதனை தொடர்ந்து பேசிய சீமான் ஆதரவாளர்கள் “விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு தான் ஆபத்து. இளைஞர்களின் வாக்குகளை யார் பெற போகிறார்கள் என்ற சண்டைகள் கூட எழலாம்.., எப்படி விஜய் உடன் கூட்டணி வைத்துவிடுவோம் என்ற நோக்கில் தற்போது திமுக-வை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பேசிய போது. விஜய் அரசியல் வருகையை அண்ணன் சீமான் வரவேற்று பேசுகிறாரே தவிர, விஜய்யுடன் கூட்டணி வைத்துக்கொள்ள போகிறேன் என சீமான் உறுதியாக கூறவில்லை.
எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. முதலில் “தமிழக வெற்றிக் கழகம்” தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்கி, நாதக-வின் தமிழ் தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்க போவதாக தான் அண்ணன் சீமான் சொல்லி இருக்கிறார்.
மற்றபடி விஜய் சீமான் கூட்டணியால் நாதக கட்சிக்குள் முரண் ஏற்பட்டிருக்கிறது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. சீமான் எந்த ஒரு சூழலிலும் அப்படி செய்யமாட்டார் என உறுதியளித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ