தொடரும் வழக்கறிஞர்கள் கொலை..! திருமங்கலத்தில் ஒரு சம்பவம்..! 1000 வழக்கறிஞர்கள் எடுத்த முடிவு..!
கடந்த வாரம் சைதாப்பேட்டையில் கவுதம் என்ற இளம் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதேபோல் திருமங்கலதிலும் சீனிவாசன் என்ற வழக்கறிஞரை மர்ம கும்பல் அறிவாலால் வெட்டி தப்பியது.
இவ்வாறு தமிழ்நாட்டில் தொடர்ந்து வழக்கறிஞர்களை படுக்கொலை செய்வது அதிகரித்து வருவதால் இதை தடுக்க 20 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டுத்தொடரில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சருக்கு தபால் மூலம் மனு அளித்துள்ள அவர் இந்திய குடியரசு தலைவருக்கும் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்று வருவதால் உடனடியாக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மேலும் 2021ல் மத்திய அரசு கொண்டு வந்த வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என குடியரசு தலைவருக்கும் மனு அளித்துள்ளோம் என்றார்.
அதேபோல் சட்டப்பேரவையில் அமல்படுத்த வில்லை என்றால் 1000 வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு சட்டத்துறை அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்