“தி கேரளா ஸ்டோரி” தொடரும் கண்டனம்..!! பினராயி விஜயன் எச்சரிக்கை..!!
ஒரு திரைப்படம் எடுக்கப்பட்ட பின் எழப்படும் சர்ச்சைகள் ஏராளமானது.., ஆனால் ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வருடங்கள் கழித்தும் இன்று வரை சர்ச்சை எழுந்து கொண்டே இருக்கிறது.
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் 2023ம் ஆண்டு மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் திரையில் வெளியானது. அந்த படத்தின் கதை சர்ச்சையை கிளப்பும் வகையில் எடுக்கப்பட்டதால் அந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனால் தி கேரளா ஸ்டோரி படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் கலவரம் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தூர்தர்ஷன் சேனலில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட இருந்ததால் அதற்கு கேரள மாநிலத்தின் மந்திரி பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘தி கேரளா ஸ்டோரி‘ படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தேர்தலுக்கு முன்னதாக இப்படி படங்களை ஒளிபரப்பு செய்வது மத உணர்வை தூண்டும் விதமாக இருக்கும் எனவே இதுபோன்ற படங்களை தேர்தல் சமயங்களில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் இன்று ஒளிபரப்பு செய்ய இருக்கும் தி கேரளா ஸ்டோரி படத்தை தூர்தர்தன் கை விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..