சென்னை ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 384வது சென்னை தினமாகும். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தினம் குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?
சென்னை – ஒட்டுமொத்த இந்தியாவைப்… pic.twitter.com/dXWtX2DOZg
— M.K.Stalin (@mkstalin) August 22, 2023
“பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா, ஊர் என்பதா, உயிர் என்பதா சென்னையை. சென்னை ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம். வாழிய வள்ளலார் சொன்ன தருமமிகு சென்னை.” எனத் தெரிவித்துள்ளார்.