கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு அளித்த குழந்தைகள்..!! கனிமொழி அளித்த உறுதி..!!
எங்கள் ஊரில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு அளித்த பள்ளி குழந்தைகள். பள்ளி மாணவர்களுக்கு தலையில் பூ வைத்து அழகு பார்த்த கனிமொழி எம்பி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எத்திலப்பநாயக்கன்பட்டி, தாப்பாத்தி ஆகிய இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 40லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடங்கள், எட்டயபுரத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எத்திலப்ப நாயக்கன் பட்டியில் சமுதாய நலக்கூட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது கனிமொழி எம்பியை வரவேற்க வைத்திருந்த பூக்களை அங்குள்ள பள்ளி குழந்தைகளியிடம் கனிமொழி எம்பி வழங்கியது மட்டுமின்றி, சில பள்ளி மாணவிகளுக்கு கனிமொழி எம்பி தனது கையினால் அவர்களது தலையில் வைத்து அழகு பார்த்தார்..
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி குழந்தைகளிடம் இன்றைக்கு பள்ளிக்கு செல்ல வில்லையா என்று கேட்டார். உங்களைப் பார்க்க வந்திருப்பதாக கூறிய பள்ளி குழந்தைகள், அப்போது தங்களது கிராமத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
அங்கு நின்று கொண்டு வந்த பள்ளி மாணவர்களிடம் எந்த வகுப்பு படிப்பதாக கேட்டார். அதற்கு அந்த மாணவர் 5 standard (5ம்வகுப்பு) என்றார். அப்போது கனிமொழி எம்பி மற்ற அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர், 5th standard என்று சொல்ல வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினர்.