போலே பாபா மீது வழக்குகள் பதிவு..! போலே பாபா போலீசில் சிக்கியது எப்படி..?
134 உயிர்களை பலி வாங்கிய ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கு காரணமான சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று முன்தினம் ஆன்மீக கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஆன்மீக சொற்பொழிவாளர் “போலே பாபா” உரையாற்றியுள்ளார்.
அவரின் ஆன்மீக உரையை கேட்க திரளான பக்தர்கள் அதில் பங்கேற்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து பக்தர்க்கல் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர்..
அதில் சிக்கி நேற்று ஒரே நாளில் மட்டும் குழந்தைகள், பெண்கள் என 116 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பின், இன்று 5 பேர் என மொத்தம் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 28 பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் கூறுவது என்னவென்றால், “ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டி வரும் நிலையில், போலே பாபா மீது வன்கொடுமை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆக்ரா, எட்டாவா, ஃபருகாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களிலும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே ஜூனியர் என்ஜினீயர் தேர்வு எனப்படும் ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் சாமியார் போலே பாபாவுக்கு தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் மாநிலம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
வினாத்தாள் கசிவு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட ஹஷ்வர்தன் மீனா என்பவருக்கும் போலே பாபாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் வழங்கிய நிலத்தில் போலே பாபா ஆசிரமம் ஒன்றை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
















