ட்விட்டரில் மொபைல் எண் இல்லாமல் வீடியோ கால் பேசலாமா..? எப்புட்றா..!!
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை விரைவில் கொண்டு வர இருப்பதாக அதுவும் மொபைல் எண் இல்லாமலே பேசலாம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
வாட்சப், இன்ஸ்டாகிராம், மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பிரபலம் அடைந்து இருப்பதை போல இன்னும் ட்விட்டர் மக்களிடையே பிரபலம் அடையாமல் இருக்கிறது. என எண்ணிய எலான் மஸ்க் ட்விட்டர் வலைதளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய விரும்பினார்.
அதற்காக ட்விட்டர் என்று பெயரை எக்ஸ் என மாற்றினார், ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 75% நபர்களை பணி நீக்கம் செய்தார். இதனை தொடர்ந்து ட்விட்டர் என அழைக்கப்படும் எக்ஸ்-ல் பல்வேறு மாற்றங்கள் செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எக்ஸ் ஆப் இவரின் கனவு பிராஜெக்ட் என்பதால் ஒவ்வொரு மாற்றத்தையும் அவர் பார்த்து பார்த்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். வாட்சப், இன்ஸ்டாகிராம், மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி இருப்பதை போல எக்ஸ் என அழைக்கப்படும் ட்விட்டரில் இந்த மாற்றத்தை கொண்டு வரப் போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதை செய்தால் மற்ற ஆப்பிற்கும் ட்விட்டருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.., எனவே தான் மொபைல் என் இல்லாமல் வீடியோ கால் செய்யும் வசதியை கொண்டு வர போவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..