ஆஸ்திரேலியா வீரர்களின் பனி சுமையை குறைப்பதற்காக அந்த அணி நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியால் 17.5 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன் பந்து வீச குறிப்பிட்ட காலம் தடை செய்துள்ளது.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதிலிருந்தே தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்டு ஐபிஎல் அணிகள் வீரர்களை வாங்கியது. அதில் அதிக முறை சாம்பியன்ஸ் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 17.5 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கமெரூன் கிறீன் என்ற வீரரை வாங்கியது. அதிக விலை என்றாலும் இந்த வீரர் அந்த அணிக்கு பலம் சேர்க்க குயவர் என்று பலரும் கூறிவந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா எதிரான ஆஸ்திரேலியாக்காக டெஸ்ட் தொடரில் விளையாடும் போது அவரது கையில் காயம் ஏற்பட்டது.
ஓய்வில் இருக்கும் அவர் அடுத்ததாக வர் இந்தியா எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது இதனால் அவரின் பணிசுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியா நிர்வாகம் அவருக்கு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை பந்து வீச தடை செய்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடக்கத்தில் அவரால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்துவீச முடியாது என்று தெரிகிறது. இந்த முடிவை ஏலத்திற்கு முன்பே ஐபிஎல் அணிகளிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளது மேலும் வீரர்களின் பங்கிரேபு விதிமுறைகளை முழுவதும் கூறியே பின்னரே மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post