35% வரை தொழில் வரி உயர்வு..! மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட 40 தீர்மானங்கள்..!
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் குமரகுருபரன் கலந்து கொண்டார். மேலும் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்.
40 தீர்மானங்கள் நிறைவேற்றம் :
இந்த கூட்டத்தில் முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்காக மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ரங்கல் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
அதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் தொழில் வரி உயர்த்தும் தீர்மானமாகும். அதாவது சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
தொழில் வரி :
அதாவது சென்னை மாநகராட்சியின் சட்ட விதிகளின் படி 5 ஆண்டுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதங்களை மாற்றி அமைக்க முடியும். இந்த தொழில் வரி மாற்றம் செய்யும்போது குறைந்தபட்சம் 25 சதவீதத்துக்கும் குறையாமலும், அதிகபட்சமாக 35 சதவீதத்துக்கு மிகாமலும் தொழில் வரியில் மாற்றம் செய்ய வேண்டும்.
மாநகராட்சி தீர்மானம் :
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் அதில் மாற்றம் செய்யப்பட்டு.
35 சதவீகித வரி உயர்வு :
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று தொழில் வரியை 35 சதவீதம் வரை அதிகரிக்க சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அறிக்கையின் படி மாத வருமானமாக 21 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்கும் ஊழியர்களுக்கு எந்த விதமான வரியும் இல்லை.
அதுவே 21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 135 ரூபாயில் இருந்து வரியானது 180 ஆக உயர்தப்பட்டுள்ளது.
அதேபோல் 30 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரியானது 315 ரூபாயில் இருந்து 430 ரூபாயாக உயர்தப்பட்டுள்ளது.
தொழில்வரி நிர்ணயம் :
அதேபோல் தொிழல் வரி விகிதம் திருத்தம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை அங்கீகரிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கும்பட்சத்தில் தொழில் வரி உயர்வு என்பது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு:
கூட்டம் தொடங்கிய நிலையில் தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாமன்ற உறுப்பினர் திரவியம் தலைமையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்காததை கண்டித்து இன்றைய கூட்டத்தில் பட்ஜெட் நகலை கழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாகவும்
மத்திய பாஜக அரசு இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து துரோகங்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.