பாஜக கவுன்டவுன் ஸ்டார்ட்…!! முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்த ட்வீட்..!!
பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ்வலைதள பதிவில் பதிவிட்டு இருப்பதாவது.,
“புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில், 27% பேர் #Unemployment- தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.
சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது..” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு கருத்துக்கணிப்பு :
Lokniti CSDS என்ற ஆய்வு அமைப்பு தேர்தலுக்கு முன் ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. அதில் மக்கள் பதிவிட்டுள்ள குறைகள் என்னவென்று பார்த்தால்..,
62 சதவீதம் பேர் வேலையில்லாமல் தவிப்பதாகவும்.., 12 சதவீதம் பேர் வேலை கிடைப்பது எளிது என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் முஸ்லீம் இளைஞ்சர்கள் பதிவிட்டுள்ள கருது கணிப்பில் 67 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு பெறுவது எந்த அளவிற்கு கடினமோ அதைவிட கஷ்டம் இந்த நாட்டில் வேலையில்லாமல் தவிப்பது என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் 63 சதவீத பேர் வேலையில்லாமல் தவிப்பதாகவும் பழங்குடியினர்களில் 59 சதவீதம் பேர் வேலை கிடைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர் . வெறும் 17 சதவீதம் பேர் மட்டுமே வேலை எளிதாக கிடைக்கிறது என கருத்தை பதிவு செய்துள்ளனர்..,
அதனை தொடர்ந்து பிறர் பதிவிட்டுள்ள கருத்து கணிப்பில்.., 76% விகிதம் பேர் பண பிரச்சனையையும், 76% விகிதம் பேர் விலைவாசி உயர்வு குறித்து பதிவிட்டுள்ளனர். இந்த கருத்து கணிப்பானது 19 மாநிலங்களில் நடத்தப்பட்டதில் 1,10,019 பேர் கருத்தை பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..