ஆவடியில் தொடரும் பைக் திருட்டு..! பறி தவிக்கும் இளைஞர்..!
கடந்த சில மாதங்களாக ஆவடியில் பைக் திருட்டு சம்பவம் தொடர்ந்து வருகிறது.. இது பற்றி அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் அந்த திருட்டு சம்பவம் சில தினங்கள் நடைபெறாமல் இருந்துள்ளது.
சென்னை ஆவடி ஹவுசிங் போர்டில் வசிக்கும் இந்த இளைஞர்.., சுய தொழில் செய்துகொண்டே OneTimeFood (https://youtu.be/XPxzN7xsqr0?si=DLl5bDCLwkN3sXuW) என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்., இதன் மூலம் ஏராளமானோருக்கு இலவசமாக உணவு அளித்து வருகிறார்.
இன்று அதிகாலை பிரபல யுடியூபரும் சமூக நல ஆர்வளருமான “சுரேஷ்” என்ற இளைஞரின் பைக் திருட்டு போய் உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் காவலர்கள் புகாரை ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
எத்தனையோ பேருக்கு பசி என்று வருபவர்களுக்கு தினமும் இலவசமாக உணவு அளிக்கும் இந்த இளைஞருக்கு இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட இந்த மாடல் பைக்கை கண்டால் கீழ்கண்ட இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.
சுரேஷ் 8056161364
Discussion about this post