தேனி மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை..!! வேதனையில் மக்கள்…!!
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் முக்கிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் வருசநாடு., வெள்ளிமலை, மேகமலை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் தேனி மூலிகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது..
எனவே மூலிகை ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ., சுற்றுலா பயணிகள் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது., இந்த மூலிகை ஆற்றின் தண்ணீரை வைத்து தான் அங்கு நாட்டு வைத்தியங்கள் பார்க்கபடுவதால் ஆற்றிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்..