தமிழர்களுக்கு ஆர்மீனியா நாட்டில் நடந்த கொடுரம்..!! கண்ணீர் வடிக்கும் தமிழர்கள்..!!
குடும்ப கஷ்டத்திற்காக ஆர்மீனியா நாட்டிற்க்கு வேலை தேடி சென்ற 30 இளைஞ்சர்கள் தங்க இடம் மற்றும் உண்ண உணவு இன்றி தெருவில் பிச்சை எடுப்பதாக ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது..
மாதம் 65,000 ரூபாய் சம்பளம்.., +டிப்ஸ், தங்க இடம் இலவசம் என ஆசை வார்த்தைகள் கூறி.., சில திருட்டு மோசடி ஏஜெண்டுகள்.., பல இளைஞ்சர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ் ட்ராவல்ஸ் நடத்தும் கிருஷ்ணராஜ் (ஏமாற்றுபவர்) மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நிசான் (ஏமாற்றுபவர் ) நிசான் கன்சல்டன்சி நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர், கும்பகோணம், மற்றும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் 30 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்..
மேலும் டூரிஸ்ட் பாஸ்போர்ட் மூலம் அந்த இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.., அங்கு சென்ற பின்னரே தமிழக இளைஞர்களுக்கு தாங்கள் ஏமாற்றபட்டு விட்டோம் என தெரிந்துள்ளது..
வெளிநாட்டிற்கு சென்ற பின் தங்க இடம், சாப்பிட உணவு இல்லமால் தவித்துள்ளனர்.., மேலும் சில நாட்களாக இந்த பிரச்சனை தொடர்வதால்.., வெளிநாட்டில் பிச்சை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்கள் உறவினர்களை நினைத்த அந்த இளைஞர்கள் தங்களின் நிலைமை குறித்து சமூகவலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.., மேலும் இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது எனவும் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
மேலும் ஏமாற்றிய அந்த ஏஜென்ட்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..