“கலைஞர் வேடத்தில் நடிக்க ஆசை” – நடிகர் ஜீவா பேட்டி!
நூற்றாண்டு கண்ட தலைவர்:
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கலைஞர் கருணாநிதி.
இதன்மூலம், மக்கள் மனதில் புரட்சியை ஏற்படுத்திய இவர், தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்திருக்கிறார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக, பல்வேறு நல்ல திட்டங்களை உருவாக்கியுள்ள கலைஞரை, தமிழக வரலாற்றில் இருந்து அழிக்கவே முடியாது.
டிரெண்டாகும் பயோபிக் சினிமா:
நிஜ வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களின் கதைகள், சினிமாவாக எடுக்கப்பட்டு வருவது தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தந்தை பெரியார், கர்ம வீரர் காமராஜர் என்று பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கலைஞர் கருணாநிதியின் வரலாறு திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், கருத்துகள் உலாவி வருகிறது.
ஆசையை சொன்ன ஜீவா :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜீவா. இவர், ராம், கற்றது தமிழ், ஈ என்று பல்வேறு தரமான படங்களில், ஹீரோவாக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், இவர் தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள, கலைஞர் புகைப்பட கண்காட்சிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த புகைப்படங்களை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “நான் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
தற்போது, கலைஞர் கருணாநிதி ஐயாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்தால், அதில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது” என்று கூறியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி:
நூற்றாண்டு கண்ட கலைஞர் கருணாநிதியின் மிகவும் முக்கியமான தருணங்கள், புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள், தற்போது கண்காட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி அன்று, நடிகர் பிரகாஷ் ராஜ் மூலமாக தொடங்கப்பட்ட இந்த புகைப்படக் கண்காட்சி, வரும் 10-ஆம் தேதியோடு, முடிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானிகார்த்திக்