ஆருத்ரா நிதி நிறுவன மோசடி..! 15 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய ஆர்.கே.சுரேஷ்..!
சென்னை ஆருத்ரா கோல்டு நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2438 கோடி வரை மோசடி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் அந்நிறுவத்தின் இயக்குனர், மேலாளர், என 21 பேரையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் நடிகர் ரூஷோ உட்பட 10 க்கும் மேற்பட்டோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் ரூஷோ கூறியிருப்பது. நடிகர் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் இருந்து 15 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.
அந்த பணத்தின் மூலம் சினிமா எடுத்தாகவும் விசாரணையில் கூறியிருக்கிறார். விசாரணையில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி.., நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீசார். ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர் 15 கோடி ரூபாய் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆர்.கே.சுரேஷின் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post