ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! மாயாவதி சென்னை வருகை..! தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோள்..!
சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை. நேற்று முன் தினம் இரவு கட்சியின் ஆதரவாளர்களுடன் வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி செய்வதை போல வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.. அதனை அடுத்து கொலை செய்த வழக்கில் 8 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து கொலைக்கான காரணம் குறித்தும் நேற்று மாலை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக “பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி” இன்று காலை 9:30 மணிக்கு, தனி விமானத்தில், டெல்லியில் இருந்து பகல் 1 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அதற்காக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.
அஞ்சலி செலுத்திய பின் தலைவர் மாயாவதி, மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து வழக்கை சிபிசிஐடி அதிகாரிகளுக்கு மாற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..