புனித வெள்ளியை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.
இன்று மாலை 5.30 மணி அளவில் தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு,பொது மன்றாட்டு,சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையாகவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
வேளாங்கண்ணி கடற்கரை காலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொதுமக்கள் வருகையை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து வாகனம் நிறுத்துமிடத்தினை ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.