அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்…!! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி கல்லூரி முடிந்த பின் காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை கண்ட மர்ம நபர்கள் சிலர் அந்த மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்லூரிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.