அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமான நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு அகால மரணம் அடைந்தார்.
கடந்த சில வருடங்களாக மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ‘அங்காடி தெரு’ நடிகை சிந்து (42) காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மார்பக புற்றுநோய் முற்றிய நிலையில் இடது பக்க மார்பகம் அறுவை சிகிச்சையால் அகற்றப்பட்டது.
இருப்பினும், நாளுக்கு நாள் உடல் நலம் குறைந்து வந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.