காலம் உள்ளவரை கலைஞர்..! திமுக சார்பில் இன்று..!
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது
சென்னை திரு.வி.க நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் “காலம் உள்ளவரை கலைஞர்” நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
குருதி கொடை நிகழ்வில் சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ எம்.பி கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ கூறியதாவது, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றது..
தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தேர்தல் அறிவித்த பொழுது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தமிழக முதலமைச்சரின் ஆட்சியினால் மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் என நம்புகிறோம்.
மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை தமிழக மக்கள் தருவார்கள்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இரண்டு நாட்களில் முடிந்துவிடும் ஜூன் நான்காம் தேதி இந்திய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர். இரத்தம் கொடுத்த அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் பழம், ஜூஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
– லோகேஸ்வரி.வெ