விசிகவிற்கு சின்னம் ஒதுக்கீடு..!! திருமாவளவனின் அடுத்த பிளான் இது தானா..?
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இதில் சிதம்பரம் தொகுதியில் சிட்டிங் எம்பியாக திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்பியாக ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் விசிகவிற்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், பானை சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தை கட்சியினர் விண்ணப்பம் அளித்திருந்தனர். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது.
வேட்புமனு வாபஸ் பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள் என்பதால் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மேலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் எந்த வேட்பாளர்களும் பானை சின்னத்தை கேட்கவில்லை என்பதால் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு பானை சின்னம் வழங்கப்பட்டது
இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல சூழ்ச்சிக்காரர்களின் போராட்டத்திற்கு பிறகு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் கேட்ட சின்னம் கொடுத்துவிட்டால் எங்கே அவர்கள் தோற்று விடுவோமோ என்ற தோல்வி பயத்தில் சின்னம் கிடைக்காமல் செய்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெறப்போவது இந்திய கூட்டணி தான் என்று.
வருகின்ற தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் நின்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த சூழ்ச்சிகாரர்களுக்கு பதிலடி கொடுப்போம். வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமோ அதற்கான பிளான் போய் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்று விட்டு நாங்கள் மாற்றதை செயலில் காட்டுகிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..