நடிகை நயன்தாரா நடித்து வெளியாக இருக்கும் கனெக்ட் படத்தின் ப்ரோமொஷன்காக ஒரு நேர்காணலில் பங்கேற்ற பொழுது அவரது கணவர் விக்னேஷ் சிவன் பற்றி பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கதாநாயகளுக்கு முக்கியதுவம் தரும் படங்களுக்கு அதிக ஆர்வம்காட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கினார்.
அதில் அவருடைய கணவரான விக்னேஷ் சிவன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, தன்னுடைய காதலெல்லாம் என் கணவர்தான். எப்போது நாங்கள் காதலிக்கத் துவங்கினோமோ அப்போதிலிருந்து காதலுக்கான அர்த்தமாக அவர் இருக்கிறார். அவருடன் இருக்கும்போது தனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்ன நடந்தாலும் அவர் பார்த்துகொள்வார் என்ற தைரியம் எனக்கு வரம் என்று கூறினார்.
மேலும் அவர் மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், பொதுவாக தன் மீது வரும் விமர்சனகளுக்கு கண்டுகொள்ளுவதில்லை என்றும் ‘கனெக்ட்’ படத்தின் ஒரு காட்சியிலிருக்கும் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து, அது வைரலானது. ‘வெயிட் போட்டால் வெயிட் போட்டீங்க எனவும், ஒல்லியாக இருந்தால் ஒல்லியாகிவிட்டீர்கள்’ என விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் இப்போதெல்லாம் எது செய்தாலும் தவறாக தெரிகிறது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அவரிடம் அவரது 20 ஆண்டுகள் திரையுலக பயணம் மற்றும் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதது குறித்து தொகுப்பாளரின் கேள்விக்கு, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் தான் திரைத் துறைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. திரைத் துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு எப்போதும் பெரிய அளவில் முக்கியத்துவமே தரப்படவில்லை. ஓர் இசைவெளியீட்டு விழாக்களுக்குச் சென்றாலுமே கூட முக்கியத்துவம் எதுவுமில்லாமல் நடிகைகளை ஒதுக்கிவிடுவார்கள். ஆகயாலயே தான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. திரைத் துறையில் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். தற்போது பெண்களை மையப்படுத்தி பல படங்கள் வருகிறது. இந்த மாதிரியான கதைகளுக்கு தயாரிப்பாளர்களும் ரெடியாக இருகின்றனர். இப்போதெல்லாம் 15, 20 பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில், அதில் 5 படங்கள் பெண் மைய கதாபாத்திரத்தை தழுவி வெளியாகின்றது வரவேற்கதக்க விஷயம் என்று அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேசினார்.